மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக திமுக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு அளித்துள்ளது.
மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து புதிய விவாதம் ஒன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஓபிசி என்பது பிசி, எம்பிசி உள்ளிட்ட பிரிவினருக்கான மொத்த இட ஒதுக்கீடு சலுகை ஆகும். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் ஓபிசி என்பது பிசி மற்றும் எம்பிசியாக பிரித்து தனித்தனியாக குறிப்பிட்ட சதவீதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இருவரும் ஓபிசி என்ற வகைக்குள் வந்துவிடுவார்கள். மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் தற்போது கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு பற்றி மூன்று மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்ற ஹைகோர்ட் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்யும் என்பதால், தங்களது கருத்தை கேட்காமல் ஆணை பிறப்பிக்க கூடாது என்று திமுக மனு தாக்கல் செய்துள்ளது.