Categories
உலக செய்திகள்

எங்கள் விஞ்ஞானிகள் மூலம் கொரோனாவை வென்று காட்டுவோம்…. உறுதியுடன் கூறிய அதிபர் டிரம்ப்….!!

அமெரிக்க விஞ்ஞானிகளை கட்டவிழ்த்து விட்டு கொரோனா வைரஸை முழுமையாக தோற்கடிப்போம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்கா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் முதலிடத்தில் இருக்கின்றது. நாட்டின் மொத்த பாதிப்புகள் 4,286,663 ஆக பதிவாகியிருக்கின்றன. அதில் 147,588 க்கும் மேலான மக்கள் உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வட கரோலினா மாநிலத்தில் ஒரு கொரோனா தடுப்பு ஊசி ஆய்வை நேற்று பார்வையிட்டார். அப்போது” அமெரிக்கா அறிவியல் விஞ்ஞானிகளை கட்டவிழ்த்து விட்டு” கொரோனா வைரஸ் தோற்கடிக்கப் போவதாக உறுதி கூறினார். அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும் மாடர்னா நிறுவனமும் சேர்ந்து தயார் செய்த கொரோனா தடுப்பு ஊசி தொடக்க கட்ட சோதனைகளை முடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இத்தகைய தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை நேற்று தொடங்கியுள்ளது.

அமெரிக்கா முழுவதிலும் இருந்து 30,000 தன்னார்வலர்களுக்கு இத்தகைய தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது.அவர்களில் பாதிக்கும் மேலானோர்க்கு உண்மையான மருந்தும் மீதம் உள்ளவர்களுக்கு போலி மருந்தும் செலுத்தப்பட்டன. மருந்து செலுத்தப்பட்ட அனைவரையும் மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். ஒரே நேரத்தில் 30,000 பேரிடம் தடுப்பூசி பரிசோதனை நடத்துவது மிக முக்கியமான சாதனையாக உள்ளது. இத்தகைய தடுப்பூசியை பல்வேறு இனத்தினர், பல்வேறு வயதுக்குட்பட்டவர்கள் என அமெரிக்காவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்ற மக்களிடம் செலுத்தி சோதிக்க வேண்டியது மிக முக்கியமானது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனடிப்படையில் தற்போது பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களிடம் இந்த தடுப்பூசியை செலுத்தி சோதிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா சென்ற மார்ச் மாதம் முதல் கொரோனாவுக்கு எதிரான போர் என்ற திட்டத்தின் கீழ் தடுப்புசி மேம்பாட்டு முயற்சிகளுக்கு 6.3 பில்லியன் டாலருக்கும் மேலாக செலவு செய்துள்ளது.கொரோனா மருந்துகளை “உலகளாவிய பொது நன்மை” என அழைத்த ஐரோப்பிய தலைவர்களை போல் இல்லாமல், முதலில் அமெரிக்க மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதே நோக்கமாகக் கொண்ட இத்தகைய திட்டம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மோரிஸ்வில்லில் இருக்கின்ற புஜிஃபிலிம் டையோசிந்த் பயோ டெக்னாலஜி ஆய்வகத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆய்வு நடத்தினார். அது பற்றி அவர் கூறுகையில், “அமெரிக்க அறிவியல் விஞ்ஞானிகளை கட்டவிழ்த்துவிட்டு” கொரோனா வைரஸை தோற்கடிப்போம் என்று உறுதி கூறியுள்ளார்.

Categories

Tech |