கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து ஐஸ்வர்யா ராய் பச்சன் அவரது மகன் ஆராத்ய மருத்துவமைகளிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு ஜூலை 11 தேதி அன்று கொரோனா தொற்று உறுதியானது பலரையும் அதிர்ச்சில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய்,பேத்தி ஆராத்ய ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அமிதா பச்சன் அபிஷேக் பச்சன் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.
ஐஸ்வர்யா ராய் ஆராத்ய இருவரும் வீட்டினிலையே தனிமைப்படுத்தி கொண்டனர். ஆனால் சில தினங்களுக்கு பிறகு அதாவது கடந்த 17ம் தேதி ஐஸ்வர்யா ராய் ஆராத்ய ஆகிய இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததால் ஐஸ்வர்யா ராய் பச்சன் அவரது மகள் ஆராத்ய ஆகியோர் மருத்துவமையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். எனினும் அமிர்தா பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன்தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.