Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை விஜயலட்சுமியிடம் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை

சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமியிடம்  மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

 

ப்ரண்ட்ஸ் , பாஸ் என்கிற பாஸ்கரன் ,மீசைய முறுக்கு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர் விஜயலட்சுமி. சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார். இந்நிலையில்  நேற்று முன்தினம் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த விஜயலட்சுமி தற்போது அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் மருத்துவமனைக்கு எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் திரு வெங்கடேசன் வந்து விஜயலட்சுமியிடம் நேரில் விசாரணை நடத்தி விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை அவர் பதிவு செய்து கொண்டார்.

Categories

Tech |