Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

விதவைப் பெண்ணிற்கு கிராமமக்கள் செய்த கொடூரம்…. தன்னார்வளர்களால் உயிர் பிழைத்த பெண்…..!!

கணவனை இழந்த விதவை பெண்ணை கிராம மக்கள் சூனியம் செய்பவர் என்று கூறி அடித்து துன்புறுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 36 வயதான ஒரு பெண் தனியாக வசித்து வந்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். தன் கணவரை தானே மாந்திரீகம் செய்து கொன்றுவிட்டார் எனவும், அந்தப் பெண்ணை ஒரு சூனியக்காரி எனவும் ஊர் மக்கள் அவள் மீது வீண் குற்றங்களைசுமத்தினர். அத்துடன் அப்பெண்ணை தொடர்ந்து கொடுமை செய்து  ஊரை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தி வந்துள்ளனர். செல்வதற்கு வேறு இடமில்லாமல் ஊர்மக்களின் கொடுமைகளை பொறுத்துக்கொண்டு அப்பெண் அங்கேயே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கொடூரத்தின் உச்சகட்டமாக அந்த விதவைப் பெண்ணை கிராம மக்கள் தூணில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர் . இதுகுறித்து தன்னார்வலர் நிறுவனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த ஊழியர்கள் படுகாயமடைந்த அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் . மூட நம்பிக்கை காரணமாக கிராம மக்கள் மிக மோசமாக நடந்து கொண்டதை கண்டித்து இவ்வாறு செய்வது குற்றம் என எச்சரிக்கை விடுத்ததோடு  இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

Categories

Tech |