Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கலெக்டருக்கு கொரோனா….. சக ஊழியர்களுக்கு பரிசோதனை….. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதனை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் துப்பரவு பணியாளர்கள், மருத்துவர்கள், காவல் துறை அதிகாரிகள், சுகாதார துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நிர்வாக ஊழியர்கள் என பலர் இந்த காலகட்டத்தில் தங்களது சேவைகளை அயராது தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனால் அவர்களில் சிலருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அதில், காவல்துறையினரில் சிலர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில், தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் கீதாலட்சுமிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |