Categories
மாநில செய்திகள்

இதை செய்யாதீங்க….. மொத்த காசும் போய்டும்….. காவல்துறை எச்சரிக்கை….!!

இலவசமாக ஆக்ஸி மீட்டர் என்னும் செயலியை டவுன்லோட் செய்ய கூறி லிங்க் ஏதேனும் வந்தால் அதனை புறக்கணிக்குமாறு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம் வளர வளர அது நமக்கு கூடவே ஆபத்தையும் தேடித்தருகிறது. இன்று அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாத வீடுகளை காண இயலாது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதிலிருந்தே வீட்டில் இருந்தபடியே அனைத்து வேலைகளையும் முடிந்த அளவிற்கு மக்கள் பார்த்துக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள். அதற்கு பெரிதும் உதவியாக இந்த ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன.

சிறியவர்களின் ஆன்லைன் கிளாஸ் முதல் பெரியவர்களின் வங்கி வேலைப்பாடுகள் உட்பட அனைத்தையும் இந்த ஸ்மார்ட் போன் மூலமாகவே முடித்துக் கொள்ளும்படியான வசதிகள் இருக்கிறது. அது தான் தற்போது நடைமுறையிலும் இருக்கிறது. காரணம் ஊரடங்கினாலும், கொரோனாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் மக்களால் வெளியே செல்ல முடிவதில்லை. இதனைப் பயன்படுத்தி சிலர் நூதன முறையில் கொள்ளையடிக்கிறார்கள். எப்படி என்றால், கொரோனா பரவல் உள்ள இந்த காலத்தில் இலவச ஆக்ஸி மீட்டர் அதாவது கொரோனா என்றாலே மூச்சுத்திணறல் பிரச்சனை தான்.

நாம் சுவாசிக்கும் முறையில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கொண்டு நமக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை இந்த இலவச செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என்ற பொய்யான விளம்பரத்தின் மூலம் லிங்க் ஒன்று அனைவரது வாட்ஸ்அப் நம்பர்க்கும் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற லிங்குகளை மக்கள் உண்மையென நம்பி கிளிக் செய்து டவுன்லோட் செய்தால் அது அவர்களது மொபைலில் உள்ள தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுவிடும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோன்று சந்தேகிக்கும் வகையில் ஏதேனும் லிங்குகள் வந்தால் உடனடியாக காவல் துறையினரை தொடர்பு கொள்ளவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Categories

Tech |