திருச்சி மாவட்டம் முழுவதும் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடுமையாக இருந்த நிலையில், தற்போது ஆறாவது கட்ட ஊரடங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பாதிப்பு எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பாதிப்பிற்கு ஏற்றவாறு விதிமுறைகளை கடுமையாக்கியும் பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு விதிகளை தளர்த்தியும் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. காரணம் அங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களை தொடர்ந்து தற்போது திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.