Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றை ஒழிப்பது கடினமான செயல்…. உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை…!!

உலகம் எவ்வளவு முயற்சி மேற்கொண்டாலும் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. அதற்குமுன் ஒரு கடின பாதை உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றை எதிர்த்து உலகம் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டாலும் அதற்கு முன்னே நீளமான ஒரு கடின பாதை இருக்கின்றது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தால் ஐந்து முறை சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இரண்டு முறை எபோலா பரவல்கள், ஜிகா, போலியோ மற்றும் பன்றி காய்ச்சல் ஆகிய சந்தர்ப்பங்களில் இத்தகைய அவசரம் இலைகள் அறிவிக்கப்பட்டன. ஆகினும் தற்போது இருக்கின்ற நிலையானது மிகவும் மோசமான நிலையாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆனது மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது வரை 650,000 மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

இத்தகைய சூழலானது உலகம் முழுவதையும் மாற்றிவிட்டது. சமூகங்களையும் நாடுகளையும் ஒன்றிணைந்து பின்னர் கவிழ்த்து விட்டது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கூறுகையில், கொரோனா என்பது இதுவரை நமது அமைப்பால் அறிவிக்கப்பட்ட மிகக் கொடுமையான உலகளாவிய சுகாதார அவசர நிலையாகும். இந்த வாரத்தில் உலக சுகாதார நிறுவனம் தமது அவசர குழுவைக் கூட்டி கொரோனா தொடர்பாக மறு ஆய்வினை மேற்கொள்ள இருக்கின்றது. கொரோனா வைரஸை எதிர்த்து உலகம் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டாலும் அதற்கு முன்னே நீண்ட ஒரு கடினமான பாதை உள்ளது என உலகம் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |