இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு அளித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னர் இந்தி திரைப்பட உலகில் வாரிசுகளின் ஆதிக்கம் இருப்பதும் வெளியில் இருந்து வருபவர்களை வளர விடாமல் அவர்கள் தடுப்பதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்து கொண்டிருக்கிறது என கூறியிருப்பது திரைப்பட உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ரகுமானின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக இணையதளங்களில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். கவிஞர் வைரமுத்து உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் அனைவரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படுகின்ற இந்தி திரையுலகினரை விமர்சித்துள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு அளித்துள்ளார். அத்தகைய டுவிட்டர் பதிவில், பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்திகளை பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்கின்றனர். இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலக அளவில் இமயம் தொட்ட நம் தமிழ்மண்ணின் ஆஸ்கர் நாயகன் திரு. ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்திருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் திரு. @arrahman தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.
— SP Velumani (@SPVelumanicbe) July 28, 2020