Categories
உலக செய்திகள்

அற்புதமான அம்சங்கள்…. இந்தியாவிற்கு வரும் ரெட்மி ஸ்மார்ட்போன்….!!

ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் புதிய வேரியண்ட் விரைவில் இந்தியாவில் விற்பனை ஆக உள்ளது. 
இந்தியா சென்ற மார்ச் மாதம் சியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்திருந்தது. இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 6 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி என மூன்று வேரியண்ட் மாடல்களில் அறிமுகம் செய்தது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல்கள் மட்டுமே விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் முதல் விற்பனை ஜூலை 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை அமேசான், எம்ஐ ஹோம் ஸ்டோர் மற்றும் எம்ஐ வலைதளங்களில் நடைபெற உள்ளது.

அதுமட்டுமின்றி  64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89,  8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா,  பக்கவாட்டில் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன், ஸ்பிலாஷ் ப்ரூஃப், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி,  5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கி உள்ளது.

Categories

Tech |