Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…அலைச்சல் அதிகரிக்கும்…மன அமைதி உண்டாகும்….!

மேஷ ராசி அன்பர்களே …!   இன்று அல்லல்கள் ஏற்படும் நாளாக இருக்கும். அலைச்சல்கள் அதிகமாகத்தான் இருக்கும் என்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக தான் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். வெளியூர் பயணங்களின் பொழுது பொருட்கள் மீது கவனம் வேண்டும். உடல் ரீதியாக சில உபாதைகள் ஏற்படலாம். உடலில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கும். குடும்பத்தை பொறுத்த வரை நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்பதில் சிரமம் இருக்கும்.

எந்தவித கருத்துக்களும் இன்று நீங்கள் சொல்ல வேண்டாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மன அமைதி இருக்கும். பெண் பிள்ளைகளுடைய நிழலில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை உங்களுக்கு எழும். கோபத்தை குறைத்துக் கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் கண்டிப்பாக இன்று நீங்கள் தலையிட வேண்டாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள்.

யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வாக்குறுதிகள் ஏதும் கொடுக்காதீர்கள். பணப் பிரச்னையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். செலவை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |