Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…காரியத்தில் அனுகூலம் உண்டு…எதிலும் நிதானம் தேவை…!

மிதுன ராசி அன்பர்களே….!   இன்று உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். வழக்கமாக செய்யும் பணிகளில் இன்று சில மாற்றங்களை செய்விர்கள். இளைய சகோதரர்களால் நன்மை கிட்டும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். எந்த  ஒரு நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு இருக்கும்.

புதிய வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக தான் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கொஞ்சம் இருக்கும். அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து எந்த ஒரு வேலையும் செய்யுங்கள். நிதானம் எப்பொழுதுமே வேண்டும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரியத்தில் அனுகூலமுண்டு. சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். வாக்குறுதியில் கொடுக்கும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

இன்று காதலர்களுக்கு எந்த விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும் நாள் ஆக இருக்கும். சுயதொழில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |