சிம்ம ராசி அன்பர்களே…! இன்று தொட்டது அனைத்துக் காரியமும் உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே நடக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூடிய சூழலும் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விடுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகளில் ஆர்வம் செல்லும். வாக்கு வாதத்தை மட்டும் தவிர்க்க வேண்டும். வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்வீர்கள். எடுத்த பணியில் சாதகமான போக்கு இருக்கும். எதிர்பார்த்த லாபம் கையில் வந்து சேரும். பொறுப்புகள் கூடும். உங்களுடைய திறமை வெளிப்படும்.
வெளிநாட்டு பயணங்களில் சில மாற்றங்களை செய்யக்கூடிய எண்ணங்களும் உண்டாகும். உங்களைப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் நல்ல பாதையில் வந்து சேரும். புதிதாக ஏதேனும் எடுக்கக்கூடிய முயற்சியில் ஞான ஒளி பெருகும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழல் இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் எப்போதுமே கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.