Categories
மாநில செய்திகள்

தமிழகம் திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்கு புதிய நெறிமுறைகள் வெளியீடு ….!!

வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் வருவதற்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு அனைவரது இயல்பு வாழ்க்கையும் முட்டுக்கட்டையாக அமைந்தது. இதனால் வாழ்வாதாரங்களை இழந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களின் வசதிக்காக நாடு முழுவதும் சிறப்பு ஸ்சலாமிக் ரயில்கள் இயக்கப்பட்டன. சிலர் நடந்தோ, சைக்கிள், லாரி போன்ற வாகனங்கள் மூலமாகவும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சொந்த ஊர்களுக்கு சென்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு மத்திய அரசு பல அறிவிப்புகளையும் வெளியிட்டது. எனினும் அங்கு வருமானம் இல்லாத தொழிலாளர்கள் தங்கள் பணியாற்றிய மாநிலங்களுக்கு திரும்ப விரும்புகின்றனர்.

தமிழ்நாட்டில் மருத்துவ வசதி ...

அந்த வகையில் தமிழகத்தில் இருந்து சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு திரும்பி வருகின்றனர். தமிழகத்தில் சிறிது சிறிதாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பணிக்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் PCR பரிசோதனையில் நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் தமிழகம் வரலாம் என்று தொழில்துறை நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. PCR பரிசோதனைக்கு தேவையான கட்டணத்தை அந்தந்த  தொழில் நிறுவனங்களே செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. யாருக்காவது ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை கட்டணத்தையும் தொழில் நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |