எகிப்தில் டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட ஐந்து பெண்களுக்கு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது .
டிக் டாக்கில் லைக் வாங்க வேண்டும் என்ற ஆசை உலக அளவில் அனைவர் மத்தியிலும் ஒரு மனநோய் போன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் லைக் வாங்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகளிலுள்ள மக்கள் புதுப்புது ஐடியாக்களை கையில் எடுக்கின்றனர். இந்தியாவை பொறுத்த வரையிலும் பலர் தங்களது சுய மரியாதையைக் கூட அந்த லைக்கிற்காக இழந்து எந்த வேலையையும் செய்யத் துணிந்து செய்கிறார்கள். பெண்களில் சிலரும் அதிகமான லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக, அரைகுறையான ஆடைகளுடன் டிக் டாக் செய்து லைக் வாங்கி வந்தனர்.
இதற்கு இந்தியாவில் இருக்கக்கூடிய பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் உலக நாடுகளில் அந்த செயலி இன்னும் இயங்கிக் கொண்டிருக்க, எகிப்தில் 5 பெண்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டால் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஆண்களை கவர டிக்டாக்கில் ஆபாசமாக உடையணிந்து வீடியோ வெளியிட்ட ஐந்து பெண்களுக்கு எகிப்து நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
மேலும் ஒழுங்கு விதிமுறைகளை மீறியதால் ரூ 1.40 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் எகிப்தில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே நாட்டில் அடக்கப்படும் பெண்களுக்காக ஒரு கூட்டம் குரலெழுப்பி போராடி வருகிறது. அதில் கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் ஒரு சிலரால் ஒட்டுமொத்த பெண்களின் சுதந்திரமும் பறிபோகும் நிலை ஏற்படுகிறது.