வடகொரியாவில் இனி போர் நடக்காது என கூறி அதிபர் கிம் ஜாங் அன் மக்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
வடகொரியாவில் கொரியாவுடனான போர் முடிவுக்கு கொண்டுவர ஏற்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதன் 67 வது ஆண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், இந்த பூமியில் இனி போர் நடக்காது என்று கூறி அந் நாட்டு மக்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய கிம் ஜாங் அன், “வடகொரியா எதிரி நாடுகளிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ளவே அணுஆயுதங்களை தயார் செய்கிறது.
வடகொரியாவின் நம்பகதன்மை அதீத சக்திவாய்ந்த அணு ஆயுதங்களால் உலகில் இனி போர் உருவாகாத சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. நம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் எப்போதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார். உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த அணு ஆயுத சோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை போன்றசெயல்கள் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கிம் இனி போர் நடக்காது என கூறியதை சர்வதேச வல்லுநர்கள் மிக ஆழமாக கவனித்து வருகின்றனர்.