தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி, செங்கல்பட்டு, ஈரோடு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் நீரில் மூழ்கியும், சாலை விபத்திலும், விஷப்பூச்சி கடித்தும் உயிரிழந்த 31 பேர் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும் இவ்வாறு எதிர்பாராமல் உயிரிழந்த 31 பேர் குடும்பத்திற்கும் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.