Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

போதை போதலை… கட்டிங் தா… தர மறுத்த முதியவர்… அடித்து கொலை…!!

மது கேட்டு தர மறுத்த முதியவரை கல்லால் அடித்து கொன்றது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த கந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்ற முதியவரும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும் ஏரிக்கரை பகுதியில் தனித்தனியாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இந்த நிலையில் ரமேஷ் தமக்கு சிறிது மது வேண்டும் எனக் கேட்க அதற்கு பூபாலன் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் கிடந்த கல்லை எடுத்து பூபாலனை சரமாரியாக தலையில் அடித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். அடித்ததில் படுகாயமடைந்த பூபாலன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தப்பியோடிய ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |