Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அரசு செம அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கல்வி அறிவை மேலும் வலுப்படுத்துவதற்கு அறிவு சார்ந்த பல போட்டிகளை தமிழக அரசாங்கம் அறிவித்து வருகிறது. இது மாணவர்களுக்கு ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஊரடங்கில் வீட்டிலிருந்து மாணவர்கள் அரசு நடத்தும் போட்டியில் பங்கேற்கும் வகையில் போட்டிகள் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் சென்னை மாவட்ட மாணவ, மாணவியருக்கு 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் [email protected] என்ற தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |