நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது முன்னோட்டமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. அதில் நல்ல முடிவை கிடைத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை தீவிர படுத்தியது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து ரேஷன் கடைகளில் அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இத்திட்டம் செயல்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பயோமெட்ரிக் முறை நடைமுறைப் படுத்தப்படும். மேலும் மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை 100% செம்மையாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.