கடந்த 5 மாதங்களாக இந்தியாவை விட்டு வைக்காமல் கொரோனா தொற்று அனைவரையும் பதம் பார்த்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது. இருந்தும் இதன் வீரியம், தாக்கம் தொடர்ந்து உச்சம் பெறுவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றது.
இந்த வகையில்தான் மாநில அரசுகள் ஊரடங்கு குறித்த பல்வேறு அறிவிப்புகளையும், உத்தரவுகளையம் பிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு வருவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி பக்ரீத் என்பதால் அன்றைய தினம் ஊரடங்கு அமலில் இருக்காது, ஆகஸ்ட் 31 வரை பள்ளி கல்லூரிகள் மூடப்படும் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.