Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை…..!!

ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற ஜூலை 31-ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதனை அடுத்த முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுயுடன் காணொளி காட்சி வாயிலாக நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதேபோன்று நாளைய தினம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் ஊரடங்கு தளர்வுகள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி மூலமாக நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அதிகாரிகள் பலர் கலந்து கொள்வர். தற்போது தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பரவல் நிலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு ஊரடங்கு தளர்வுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் மருத்துவ நிபுணர் குழுயுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |