ஊரடங்கு காரணத்தால் வெங்காயத்தின் விலை சரிந்துள்ளது விவசாயிகளுக்கு வேதனையை அளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி குறைந்துள்ளதாலும் உணவகங்களில் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளதாலும் வெங்காய விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட வேண்டிய பெரிய வெங்காயம் 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மொத்த வியாபாரி கூறுகையில், “வெங்காயத்தின் உற்பத்தி இருந்தாலும் அதன் விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது. போன வாரத்துடன் ஒப்பிடும்போது சின்ன வெங்காயம் மூன்று அல்லது நான்கு ரூபாய் உயர்ந்து 20 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மகாராஷ்டிரா கர்நாடகாவில் இருந்து வரும் பெரிய வெங்காயம் 9-ல் இருந்து 12 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகின்றது எனக்” கூறியுள்ளார்.