Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஃபைனான்சியர் வீட்டில் ரூ 5 லட்சம் கொள்ளை… அடுத்தடுத்து வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஃபைனான்சியர் வீட்டில் பூட்டை உடைத்து 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள ஆத்திபேடு கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்துவருகிறார். அவர் ஃபைனான்ஸ் தொழில் செய்துகொண்டிருக்கிறார். தினமும் அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மாடியில் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். வழக்கம்போலவே நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார். பின்னர் நேற்று காலை எழுந்து, மாடியிலிருந்து கீழே வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அச்சமயத்தில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் திருடிச் செல்லப்பட்டதை அறிந்தார். அதுபோலவே அவரின் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற வீட்டிலும் 3 சவரன் தங்க நகையும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் நடைபெற்ற இத்தகைய கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி சோழவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |