Categories
மாநில செய்திகள்

டெண்டர் விட்டாச்சு….. ஆன்லைனில் தேர்வு…. புக் எடுத்து படிங்க….. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு தேர்வை நடத்துவது சாத்தியம் இல்லை என பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை முதற்கட்டமாக தமிழக அரசு ரத்து செய்தது. அதை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கான தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்தது.

ஆனால் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கட்டாயம் நடைபெறும் என அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் தேர்வு நடத்துவதற்கான சாப்ட்வேர் தயாரிப்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் இதற்கான முழு விவரங்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |