Categories
தேசிய செய்திகள்

12 மாவட்டம்… “30 லட்சம் பேர்”… வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பீகார்..!!

பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 12 மாவட்டங்களை சேர்ந்த 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அம்மாநிலத்தில் சென்ற திங்கட்கிழமை வரை வெள்ளத்தால் 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சமஸ்திபூர் மாவட்டத்தில் வெள்ளநீர் புகுந்த காரணத்தால் மாவட்டங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து பீகார் மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் நேற்று மட்டும் 5 லட்சத்திற்கும் மேலான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 29.62 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருப்பதாக தகவல் அளித்துள்ளது. வெள்ளத்தால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ள மாவட்டமாக தர்பங்கா இருக்கிறது. அந்த மாவட்டத்தில் மட்டும் 11.74 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் 14 தொகுதிகள் வெள்ளத்தால் மூழ்கிப் போயுள்ளன. கிழக்கு சம்பரன், முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் 16 தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்களும் 9 பீகார் மாநில பேரிடர் மேலாண்மை குழுக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கிக் கொண்டிருந்த 2.62 லட்சம் பேர் தற்போது வரை மீட்கப்பட்டு இருக்கின்றனர். மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 26 வெள்ள மீட்பு முகாம்களில் 22 ஆயிரத்து 999 மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

Categories

Tech |