Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

5 மாவட்டத்தில்…. இடி, மின்னலுடன் அதி கனமழை…. அலார்ட் வானிலை ஆய்வு மையம் ..!!

கடந்த இரண்டு வருடங்களாக போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களுக்கு 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் வானிலை அறிவியல் மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |