Categories
தேசிய செய்திகள்

16 வயது மகளை பாலியல் வல்லுறவு பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்ரவதை…..!!!

புதுச்சேரியில் 16 வயது மகளை மூன்று ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு செய்தும் பெண் உறுப்பில் சூடு வைத்தும்  சித்திரவதை செய்தும்  வளர்ப்புத் தந்தையை காவல்துறை கைது செய்துள்ளது .

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு நிறைவு செய்த 16 வயது மாணவி உடலில் பலத்த காயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாணவிக்கு மருத்துவம் அளித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதை அறிந்து குழந்தைகள் நலத்துறை இடம் தெரிவித்தனர். குழந்தைகள் நலத்துறை மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் தெரியவந்தன. மாணவியின் சிறிய வயதில் அவருடைய தந்தை  உயிர் இழந்து விட்டதால். 32 வயதில் கட்டிட தொழிலாளியை 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாய் திருமணம் செய்துகொண்டார். மாணவியின் தாய்க்கும்  அவரது இரண்டாவது கணவருக்கும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் முதல் கணவருக்கு பிறந்த சிறுமி பருவம் அடைந்து உள்ளார்.

அவர் பருவம் அடைந்தது முதல் தாயின் இரண்டாவது கணவரான வளர்ப்பு தந்தை சிறுமியிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து தாயிடமும் அல்லது வேறு யாரிடமோ தெரிவித்தால் சிறுமியையும் தாயையும் விஷம் வைத்து கொன்று விடுவதாக அந்த மிருகம் மிரட்டி வந்துள்ளது. உயிருக்கு பயந்த சிறுமி தனக்கு நிகழும் கொடுமைகளை வெளியில் சொல்லாமல் மறைத்ததால் கடந்த 3 ஆண்டுகளாக அவர் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து உள்ளது.இந்த நிலையில் ஒரு நாள் காம வெறி பிடித்த வளர்ப்புத் தந்தை மனைவி வெளியே போயிருந்த நிலையில் தனக்கு பிறந்த மூன்று குழந்தைகளை அடித்தும், உதைத்தும் கடுமையாக தாக்கியுள்ளான்.

இதனை கண்டு பதறி துடித்த 16 வயது சிறுமி உனக்கு பிறந்த குழந்தைகளை நீ ஏன் இப்படி அடித்துக் கொள்கிறையே இது நியாயமா என கேட்டுள்ளார். எதிர்த்துப் பேசுவதை கண்டு ஆத்திரமடைந்த வளர்ப்பு தந்தை தனக்கு பிறந்த மூன்று பெண் குழந்தைகளையும் கை கால்களை கட்டி போட்டு அடித்துள்ளான். அவர்களை காப்பாற்ற முயன்ற 16 வயது சிறுமியின் கையை உடைத்து தலையில் பலமாக தாக்கியது மட்டுமல்லாமல் இரும்பு கம்பியால் சிறுமியின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்துள்ளான். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த சிறுமி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

தனது வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பியதால் பெரிய மகள் மயக்கமுற்று கிடப்பதையும் மற்ற குழந்தைகள் அடிபட்டு கிடப்பதை பார்த்து கண்ணீருடன் தூக்கிச் சென்று ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதன் பிறகே சிறுமிக்கு நேர்ந்த சொல்லமுடியா கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. காம கொடூரனை தேடிப் பிடித்த காவல்துறையினர் அவன் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு  பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவம் அழிக்கப்பட்டு வருகிறது. கொடுமைக்கு ஆளான சிறுமி அடையாளம் காணப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த காமக் கொடூரன் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |