தல அஜித் நடிக்கும் வலிமை படம் முதன்முதலாக இந்தியிலும் வெளியாக உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்படங்கள் எடுப்பதற்கான பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதன்மூலம் பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அரசு விதித்த நெறிமுறைகளுடன் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய பல்வேறு படங்களில் அப்டேட்டுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பாக எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படம் இந்தி மொழியிலும் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்தப்படத்தில் உலகத்தரம் வாய்ந்த ஆக்ஷன் கதை காட்சிகளும், குடும்ப சென்டிமென்ட் காட்சிகளும் மற்றும் த்ரில் என பல்வேறு அம்சங்களை கொண்டு இருப்பதால் படத்தினை இந்தியா முழுவதிலும் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் போனி கபூர் முடிவெடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த படமானது தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் பான் இந்தியா படமாக இந்தி தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் வெளியாக உள்ளது. அதன் மூலம் அஜித் நடிக்கக்கூடிய படம் முதல் முறையாக இந்தியிலும் வெளியாக இருக்கின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்குவதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.