Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிவசேனாவுடன் சேர்ந்து போட்டியிடமாட்டோம் – பாஜக மாநில தலைவர்..!!

பா.ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சி கூட்டம் மீண்டும் இணைந்து தேர்தலில் போட்டியிடாது என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வீடியோ காணொளி மூலம் மாநில நிர்வாகிகளிடம் பேசிய கட்சி தலைவர் ஜே.பி. நட்டா பாரதீய ஜனதா தனித்து ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு கட்சியை வளர்க்குமாறு கூறியுள்ளார். மேலும் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவை பலப்படுத்துமாறும் தொிவித்துள்ளார். இந்நிலையில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணி மீண்டும் அமைந்தாலும் இனிமேல் 2 கட்சிகளும் தேர்தலில் சேர்ந்து போட்டியிடாது என பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில்:-
” பா.ஜனதா நாடாளுமன்ற குழு மாநிலத்தின் நலன் கருதி சிவசேனாவுடன் கூட்டணி அமைக்குமாறு கூறினால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக உள்ளோம். இனிமேல் இரு கட்சிகள் (பாரதீய ஜனதா, சிவசேனா) கூட்டணி அமைந்தாலும் நாங்கள் எந்த தேர்தலிலும் இணைந்து போட்டியிடமாட்டோம்.

கடந்த 5 ஆண்டுகளாக சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்து வந்தோம். 2019 தேர்தலுக்கு பின் அதிக மந்திரி பதவிகளை அவர்களுக்கு வழங்க தயாராக இருந்தோம். பாரதீய ஜனதா தேசிய கட்சி, முதல்-மந்திரி பதவியை பிராந்திய கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. இங்கு இதை செய்தால் இதே கொள்கையை மற்ற மாநிலங்களிலும் பின்பற்றிய வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |