ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 13.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 21 -வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 ( 59) ரன்களும், ஜாஸ் பட்லர் 37 (34) ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் ஹாரி குர்னி 2 விக்கெட்டுகளும், பிரசித் கிருஸ்ணா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 13.5 ஓவரில் 2 விக்கெட் இழந்து 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர்களான கிறிஸ் லின் 50 (32) ரன்களும், சுனில் நரேன் 47 (25) ரன்களும் விளாசினார். மேலும் ராபின் உத்தப்பா 26 *(16) ரன்களும் விளாசினார். ராஜஸ்தான் அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டிலில் முதலிடம் பிடித்தது.