Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இனி – ஷாக் கொடுத்த அறிவிப்பு …!!

இன்றைய காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பலரும் பகுதிநேர வேலை வாய்ப்புக்கு சென்றுக்கொண்டு படித்து வருகிறார்கள். அதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களை நாம் சொல்ல முடியும். மாணவர்கள் இப்படியான முறையில் கல்வி கற்பதற்கு சாத்தியமாக இருந்தது கல்லூரி வகுப்புகள் இரண்டு ஷிப்டாக நடத்தப்பட்டது தான். இந்த முறையில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்கள்… வேலை பார்த்துக்கொண்டு படிக்க எதுவாக இரண்டு ஷிப்ட் வகுப்பு முறை இருந்து வந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையை பகுதி நேர வேலையை நம்பி இருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கல்லூரிகளில் 2 ஷிப்ட்   முறையை ஒரே ஷிப்டாக மாற்றி அந்த அரசாணையில் அறிவிப்பு  வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 50 கலை அறிவியல் கல்லூரிகளில் காலை 9.30  மணி முதல் மாலை 4.30 மணி வரையில் கல்லூரி வகுப்பு நடைபெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் உருவானதும் இந்த முறை அனைத்தும் அரசு கல்லூரிகளுக்கு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |