தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் இரண்டு ஷிப்ட் முறையை ஒரே ஷிப்ட் ஆக மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பான்மையான கல்லூரிகள் 2 ஷிப்ட் முறையைக் கொண்ட கல்லூரிகளாக இருந்து வந்தன. இதன் காரணமாக காலை ஷிப்ட் செல்லும் மாணவர்கள் ஆக்டிவாக இருப்பதாகவும், மாலை ஷிப்ட் செல்லும் மாணவர்களுக்கு படிப்பில் மந்த நிலை ஏற்படுவதாகவும் தொடர்ச்சியாக பல புகார்கள் எழுந்தன. எனவே பல கல்லூரிகளில் இரண்டு ஷிப்ட் முறையை ஒழித்து ஒரே ஷாட்டாக கல்லூரியை மாற்றுமாறு கல்வி வல்லுனர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் கல்லூரிகளில் 2 ஷிப்ட் முறையே ஒரே ஷிப்ட் ஆக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 50 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலை 9.3 மணி முதல் மாலை 4.20 மணி வரை கல்லூரிகளில் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் உருவானதும், இந்த முறை அனைத்து அரசு கல்லூரிகளிலும் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரியை பொருத்தவரையில் ஷிப்ட் முறை குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.