பாகிஸ்தான் – சீனா என தொடர்ந்து இந்தியா தனது எல்லை நாடுகளுடன் கடுமையான எல்லை பிரச்சனைகளை சந்தித்து வரக் கூடிய நிலையில் போர் விமானங்கள் என்பது மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக சீனாவிடம் ரபேலுக்கு இணையான போர் விமானங்கள் ஏற்கனவே இருந்த வந்தது. இதனை முறியடிக்கும் வகையில் இந்திய விமானப் படையிலும் ரபேல் போர் விமானங்கள் மிக முக்கியமானதாக தேவை பட்டது. இதனையடுத்து தான் கடந்த வருடம் ராஜ்நாத் சிங் அவர்கள் நேரடியாகவே பிரான்ஸ் நாட்டுடன் தொடர்பு கொண்டு விரைவாக இந்த போர் விமானங்கள் கிடைக்கச் செய்வதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்கள் .
இதையடுத்து தற்போது திட்டமிட்டபடி 5 போர் விமானங்கள் முதற்கட்டமாக இந்தியா வந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய அரியானா மாநிலத்தில் அம்பாலா போர் விமான தளத்தில் தான் தரையிறக்கபட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லாமல் இந்த போர் விமானங்களை உடனடியாக பணியில் சேர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளில் இருக்கக்கூடிய போர் விமானத் தளத்தில் இவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படலா என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இது தவிர இந்தியாவுடைய அமைப்பிற்கு எதுவாக தரம் உயர்த்துவது, சில மாறுதல்களை போன்றவற்றை விரைவில் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு ரபேல் வந்துள்ளதால் இனி சீனா இந்தியாவை சீண்டுவதற்கு தயங்கும் என்றே உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தின் நாட்டின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.