இந்தியாவிடம் தொடர்ந்து இந்தியாவை சீண்டி கொண்டிருந்த பாகிஸ்தானிற்கு பாகிஸ்தானுக்கு இணையாக தற்போது சீனாவும் இந்தியாவை சீண்ட தொடங்கியுள்ளது. மேலும் சீனா தன்னுடைய பலத்தை பயன்படுத்தி இந்தியாவை சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளையும் இந்தியாவுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது. இவர்களை இராணுவ ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் எதிர்கொண்டு கட்சிதமாக செயலாற்றிக்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவிற்கு கூடுதல் பலன்களை சேர்க்கும் வகையில் தற்போது ரபேல் போர் விமானங்கள் வந்துள்ளது. இதனால் சீனா – பாகிஸ்தான் நடுக்கம் அடைந்துள்ளது.
சொன்னதை செய்த மோடி அரசு:
நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை என்று சொல்லியதை மத்திய அரசு செயலாக்கம் கொடுத்து நிறைவேற்றியுள்ளது. இதனால் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது இந்திய நாட்டு மக்களின் பாராட்டு குவிந்து வருகின்றது. அரியானா மாநிலத்தில் அம்பாலா போர் விமான தளத்தில் தான் ரபேல் தரையிரக்கப் பட்டு இருக்கின்றது. இது எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காமல் மிக கச்சிதமாக தனது பணியை முடிக்க கூடியது. கிட்டத்தட்ட 3700 கிலோமீட்டர் தூரத்தை ஒரே வீச்சில் பயணிக்கக் கூடிய மிக முக்கியமான போர் விமானமாக இருக்கின்றது.
9000 டன் குண்டுகள்:
இந்தியாவிடம் இருக்கக்கூடிய பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் வகையிலும் இவை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ரபேல் விமானம் 9 டன் எடை கொண்ட குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இலக்குகளை மேலிருந்தும், குறுகிய இலக்குகளையும் தாக்கக்கூடியது. நீண்ட தூரமாக இருக்கக்கூடிய இலக்கையும் துல்லியமாக தாக்கக்கூடியது. மணிக்கு 2000 கிலோ மீட்டர் மணிக்கு பயணிக்கக்கூடிய அதிவேகமான போர் விமானம் எதிரி நாட்டின் மீது தாக்குதல் நடத்த வேண்டுமென்றால் கச்சிதமாக செய்து முடித்துவிட்டு திரும்பி வரும் சிறப்பம்சம் கொண்டது.
துல்லியமாக தாக்கும்:
இதில் இருக்கக்கூடிய ரேடார் என்பது எதிரிகளின் கண்களில் சிக்காமல் இருக்கும் வகையில் மிகச் சிறிய அளவில் வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே முப்பரிமாண கோணத்தில் எதிரிகளின் இடங்களை துல்லியமாகக் காட்ட கூடிய அமைப்பும் இருக்கிறது. ஒரு முறை குறிவைத்து செலுத்தி விட்டால் பிறகு மிக கச்சிதமாக இது தனது பயணத்தை மேற்கொள்ளும். ஆட்டோமேட்டிக்காக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய அமைப்பு இந்த போர் விமானத்தில் கொடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலமாக எவ்வளவு தூரத்தில் போர் விமானிகள் பறந்தாலும் அவர்களுக்கு உடல்நில கோளாறு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அதனை சமாளிப்பதற்கான வழிவகைகளும் இந்த போர் விமானத்தில் மிக சிறப்பான அம்சமாக இருக்கிறது.
15ஆண்டுகள் எதிர்பார்ப்பு:
இந்தியாவில் சுகோய் ரக போர் விமானங்கள் தான் இதுவரை அப்கிரேட் ஆக இருந்த நிலையில் தற்போது ரபேல் போர் விமானம் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. உலகிலேயே மிகக் குறைவான நாடுகள்தான் ரபேல் போர் விமானங்கள் வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இவை இந்திய விமானப்படை சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் சீனா – பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த தயங்கும் என்பதால் நாட்டு மக்கள் இந்த தருணத்தை மகிழ்ச்சியாக பார்க்கின்றனர்.