நாளை மறுநாள் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் உரையாற்றிய அவர், கொரோனா காலத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பேசினார் அந்த வகையில் சென்னையில் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கின்ற மக்களுக்கும், குடிசை பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கும் விலையில்லாமல் முகக்கவசம் வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட நாள்தோறும் 500, 600 வரை காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டன. சென்னை மாநகரத்தின் மட்டும் 27 ஆயிரத்து 532 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று முடிந்து இருக்கின்றன. அதில் சுமார் 16 லட்சம் பேர் கலந்து கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் நோய் தொற்று ஏற்பட்டிருந்தால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றோம். இதனால் சென்னை மாநகரத்தில் கொரோனவைரஸ் குறைந்து கொண் டிருக்கின்றன.
அதோடு ஒவ்வொரு வீட்டிலும் மக்களை சந்தித்து உங்களுக்கு காய்ச்சல் இருக்கின்றதா ? இருமல் இருக்கின்றதா ? தொண்டைவலி இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. அப்படி இருந்தால் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இதனால் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 20 ஆயிரம் பணியாளர்கள் சென்னையில் மட்டும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பிற மாவட்டங்களிலும் அதே போல காய்ச்சல் முகம் நடைபெற்ற காரணத்தினால் தான் அது ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டு நோய் பரவல் தடுக்கப் பட்டிருக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.