சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு சுகாதாரமின்றி மாநகராட்சி குப்பை வண்டிகளில் உணவு கொண்டு செல்லும் அவலம் நிகழ்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தன்னார்வலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று உடல் வெப்ப சோதனை செய்வதுடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி மூலம் திருமண மண்டபத்தில் உணவு சமைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.
அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் உணவு சுகாதாரமின்றி மாநகராட்சி குப்பை வண்டிகளில் வைத்துக் கொண்டு செல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகளுக்கு மட்டும் தரமான அறுசுவை உணவும் பணியாளர்களுக்கு இது போன்று வழங்கப்படுவதாகம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.