மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த முருகன் (47) என்பவருக்கு 16 வயதான மகள் இருக்கிறார். இந்நிலையில் தனது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக முருகன் தனது நண்பர் தங்கமுருகன் (23) என்பவரிடம் கூறியுள்ளார். தங்க முருகன் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர். முருகன் தன்னுடைய மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதையறிந்த பெண்ணின் தாய், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பின், காவல் ஆய்வாளர் வனிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்து தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் ப்படுத்தினார். அதன்பின் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தலைமறைவாக இருக்கும் தங்க முருகனை காவல்துறையினர் தேடி வருகி்ன்றனர்.