Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சி செய்தி : குறையும் பாதிப்பு…. ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி சென்னை மக்கள்….. சுகாதாரத்துறை தகவல்…!!

சென்னையில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

சென்னையில் நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். அது படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் குறைந்து வருவதாகவும், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி 81,130 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 12 ,852 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கணக்கில் கொண்டு பார்க்கும்போது கொரோனாவின் பாதிப்பு விகிதம் குறைந்து, மக்கள் ஆரோக்கியமான சூழ்நிலைக்கு படிப்படியாக திரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |