ராமநாதபுரம் மாவட்டத்தில் 91 வயது முதியவர் நடத்தும் சிலம்ப பயிற்சி கூடத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் சிலம்பம் பயின்று வருகின்றனர்.
முதுகளத்தூர் அடுத்த சிறுமணி ஏந்தல் கிராமத்தில் கருவேல மரங்கள் நிறைந்த கரட்டுக்காட்டுக்குள் கம்பீரம் குறையாமல் மிரட்டுகிறது ஒரு முதியவரின் குரல். மெதுவாக உள்ளே சென்றால் சிறியவர், இளையவர், இளம் பெண்கள், குடும்ப பெண்கள் என பலரும் அனாயசமாக சுற்றுச் சுழன்று சிலம்பம் வீசி மிரட்டல் விடுக்கின்றனர். சுதந்திர போராட்ட வீரரும் சிலம்பாட்டத்தில் நிபுணருமான துரைராஜ் என்ற 91 வயது முதியவர் பயிற்சியாளராக அசத்துகிறார்.
களத்துக்கு வரும் அவர் மாணவர்களிடம் சிலம்பக் கம்பை கொடுத்து எதிராளியை வீழ்த்தும் சூட்சுமங்களை சொல்லி மிரட்டுகிறார். தனக்கு தெரிந்தது தன்னோடு அழியக்கூடாது என்பதால் தந்தை-மகன் பேரக்குழந்தைகள் என தமிழனின் வீர விளையாட்டான சிலம்பத்தை கடத்தி வருகிறார் இந்த வயோதிக வீரர். பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் இந்த சிலம்பம் தமிழனின் தன்னிகரற்ற கலை உடல் உறுதி முதல் மனோதிடம் வரை இதற்கு ஈடு இணை இல்லை என்கிறார் சிலம்ப ஆசான் துரைராஜ்.