இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் இதுவரை 24 லட்சத்து 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாளுடன் இம்மாதம் 31-ஆம் தேதி ஊரடங்கு முடிவடையும் நிலையில் அதனை நீடிப்பது மற்றும் மேலும் தொடர்புகளை அறிவிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார் இந்த ஆலோசனை கூட்டத்தில் கிராமப் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், சென்னையில் கூடுதல் தளர்வுகளை வழங்குவது தொடர்பாகவும் தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதல் தளர்வுகளை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்க வாய்ப்பு உள்ளது. பொது பேருந்து போக்குவரத்து விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாகவும், மாவட்டங்களுக்குள் அல்லது மண்டலங்களுக்கு பஸ்கள் இயக்க அனுமதிக்க என்றும் பேரூராட்சி நகராட்சி பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்குவது குறித்தும் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி முடிவில் கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக கூறினார்.