புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா மிக எளிதில் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளது. அதில் “புகைப்பழக்கம் கொண்டவர்கள் கையில் கொரோனா வைரஸ் தொற்றி விட்டால் வாய்க்கு மிக எளிதாக செல்லக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. புகைப்பிடிக்கும் போது கை விரல்கள் வாய் பகுதியினை அதிகமாக தொடக் கூடிய வாய்ப்பு உள்ளதால், புகைப்பிடிப்பவர்களுக்கு மற்ற நபர்களை விட மிக எளிதில் கொரோனா பரவும். அதுமட்டுமின்றி புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் செயல்பாடு மிக விரைவில் பாதிப்படையும்.
அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக போராடக் கூடிய சக்தியை இழந்து விடுவர். இதனைப் போலவே பல்வேறு புகையிலைப் பொருள்களை பயன்படுத்தும் நபர்கள் அனைவரும் கொரோனா தொற்று மிக விரைவில் பரவக்கூடிய அபாயம் அதிகமாக இருக்கின்றது. மேலும் புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவது மூலம் மற்ற நபர்களுக்கு பரவக்கூடிய அபாய நிலை மிக அதிகமாக இருக்கின்றது” என்று கூறியுள்ளது.