சிவகாசி அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் நகை திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசிக்கு அருகே இருக்கின்ற எம்.புதுப்பட்டி வ.உ.சி என்ற நகரில் பாண்டியன் (55) என்பவர் வசித்துவருகிறார். அவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்திக் கொண்டு வருகிறார். பாண்டியனும் அவரது மனைவி சுப்புலட்சுமியும் வீட்டை பூட்டி விட்டு சாவியை கதவின் மேல் வைத்துவிட்டு பின்னர் மளிகை கடையை திறப்பதற்காக வந்துள்ளனர். அதன் பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு திறந்து இருந்த நிலையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க சங்கிலி காணவில்லை என்பதை அறிந்தனர்.
அதனால் பாண்டியனும் அவரது மனைவி சுபலட்சுமியும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் அவரது குடும்பத்தினர் அனைவரும் நகை திருட்டு போனதை பற்றி அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.