தமிழகத்தில் இன்று மட்டும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்தது. 5,927-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,72,883பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 97,575 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,735 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 73.85 % குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 3,741 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 58,818 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24,42,482 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 33 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 57,490ஆக அதிகரித்துள்ளது. தமிழக்தில் இன்று எந்த மாவட்டமும் தப்பாமல் 37 மாவட்டத்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டு, 23 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அரசை நடுங்க வைத்துள்ளது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு:
சென்னை – 1117
செங்கல்பட்டு – 540
திருவள்ளூர் -382
நெல்லை-382
காஞ்சிபுரம் -373
விருதுநகர் – 370
தூத்துக்குடி – 316
கோவை – 289
மதுரை – 225
குமரி -202
தஞ்சை-188
ராணிப்பேட்டை – 182
தி.மலை – 177
விழுப்புரம் – 138
திருச்சி – 136
க.குறிச்சி-133
தேனி -131
சேலம்-123
கடலூர்-120
திருவாரூர்-112
வேலூர் -105
கிருஷ்ணகிரி-104
புதுக்கோட்டை-81
தென்காசி-64
திண்டுக்கல்-55
நாகை-55
சிவகங்கை-48
கரூர்-43
திருப்பத்தூர்-41
திருப்பூர்-37
ராமநாதபுரம்-35
பெரம்பலூர் -27
நாமக்கல்-25
தர்மபுரி -23
ஈரோடு -23
நீலகிரி -11
அரியலூர்-4