இங்கிலாந்தில் இரண்டு வாரங்களில் கொரோனா வின் இரண்டாவது அலை உருவாகலாம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் சென்ற வாரம் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.இத்தகைய நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனா வின் இரண்டாவது அலை உருவாகலாம் என்று இங்கிலாந்து பிரதமர் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்று உருவாகி வருவது பிரதமரை கவலைக்கு ஆளாகி இருப்பதாக மூத்த அரசு அலுவலர் ஒருவர் கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும்,கடந்த ஏழு நாட்களில் பதிவாகியுள்ள கொரோனா பாதிப்பு அடைந்தவரின் எண்ணிக்கையானது ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.
சென்ற ஏழு நாட்களில் மட்டும் 700 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது 3 வாரங்களுக்கு முன்னர் உள்ள எண்ணிக்கையை ஒப்பிடும்போது 28 சதவீதம் அதிகமாக உள்ளது. தற்போதைய குளிர்காலத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து அமைச்சர்கள் எச்சரித்து வருகின்ற நிலையில், அதற்கு முன்பாக குளிர் காலத்திற்கு முன்னரே அது தாக்கலாம் என அச்சம் உண்டாகியுள்ளது. கடந்த 27ஆம் தேதி நாட்டிங்காம் சென்று வந்த போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து நாட்டவர்கள் பின்பற்றி வந்த அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் எத்தகைய சூழ்நிலையிலும் விட்டுவிடக் கூடாது என வலியுறுத்தி உள்ளார்.
தற்செயலாக கூட கொரோனா பரவுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறினார். மேலும் விதிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை நிகழ்த்த இயலும் என்றும், ஐரோப்பியாவின் ஒரு சில இடங்களில் கொரோனா வின் இரண்டாவது அலை உருவாக வாய்ப்பு இருப்பதால் நாம் அனைவரும் கவனமாக செயல்படுவது மிக அவசியம் என்று கூறியுள்ளார்.