Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 3ஆம் கட்ட தளர்வுகள் வெளியீடு …!!

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு அமலுக்கு வரும் என்று வெளியாகியிருக்கிறது.

ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் என்னென்ன தளர்வுகள் இருந்ததோ அது அப்படியே தொடரும் என்று சொல்லப்படுகிறது. மிக முக்கியமானதாக இரவு நேர இரவு நேர ஊரடங்கு என்பது தற்போது தள்ளப்பட்டிருக்கிறது. யோகா இன்ஸ்டியூட், உடல் பயிற்சி கூடங்கள்  ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து அனுமதிக்கப்படும்.சுதந்திர தின விழா கொண்டாடலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. சமூக இடைவெளி போன்றவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டே இருக்கும்.  அது சம்பந்தமான முடிவுகளை மாநில அரசு எடுத்துக் கொள்ளலாம் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். விமான போக்குவரத்தை பொருத்தவரை சர்வதேச விமான போக்குவரத்து சிறிய அளவிலாக குறைந்த எண்ணிக்கையில் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், ரயில் போக்குவரத்தை பொருத்தவரை தற்போது இயக்கப்பட்டு இருக்கக்கூடிய சிறப்பு ரயில்கள் மற்றும் தொடர்ச்சியாக இயங்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

Categories

Tech |