மத்திய உள்துறை அமைச்சகம் 3ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்து இருக்கின்றது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வருகிறது. சுதந்திர தின கொண்டாட்டம் தனிமனித இடைவெளியோடு பின்பற்றப்பட்டு நடைபெறவேண்டும். உடற்பயிற்சி நிலையங்கள், யோகா பயிற்சி மையங்கள் ஆகியன ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் செயல்படலாம்.
ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பள்ளிகள் கல்லூரிகள் செயல்பட தடை தொடர்கின்றது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசை கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம். மெட்ரோ திரையரங்கம் மதுக்கூடம் உள்ளிட்டவை குறித்த தடையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.