ரஃபேல் விமானத்தின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
இன்றைக்கு மிகவும் பேசுபொருளாக பேசப்பட்ட ஒரு விஷயம் என்றால் அது ரபேல் போர் விமானம் குறித்து தான். பிரான்ஸ் ராணுவ படையினரிடம் இருந்து வாங்கி வரப்பட்ட ரபேல் விமானம் இன்று இந்தியா ராணுவ விமான படையினரால் வரவேற்கப்பட்டு வெற்றிகரமாக தரை இறங்கியது. இந்த ரஃபேல் விமானங்கள் இந்திய ராணுவ விமானப் படையின் பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளதாக பலரும் கூறிவருகின்றனர். அப்படி என்ன விசேஷம் இந்த ரஃபேல் விமானத்தில் இருக்கிறது என்பதை காண்போம்.
- ரஃபேல் போர் விமானம் ரேடாரில் தெரியாத அளவுக்கு விசேஷ வடிவமைப்பு கொண்டது.
- இதிலுள்ள மீட்டியோர் ரக ஏவுகணைகள் 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடியது.
- இதில் நிகழ்நேர 3d வரைபடம் இருப்பதால் எந்த கால நிலையிலும் இலக்குகளை சரியாக இதனால் குறிவைத்து தாக்க முடியும்.
- அதேபோல் இந்த போர் விமானத்தில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3500 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக் கூடியது.
போரின் போது தேவைப்பட கூடிய முக்கிய அம்சங்களை மட்டுமே கொண்டுள்ளதால் தான் இது இத்தனை சிறப்பாக பேசப்படுகிறது.