அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜை விழாவை காண பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி புண்ணிய பூமி என்று அழைக்கப்படும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட இருக்கிறது. இதற்கான பூமி பூஜை விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார். அதேபோல் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். ஆர்எஸ்எஸ் தலைவரும், பிரதமர் மோடியும் ஒன்றாக கலந்து கொள்ளக்கூடிய முதல் விழா அயோத்தில் நடைபெறக்கூடிய இந்த பூமிபூஜை விழா தான்.
ஆகவே இவ்விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அதன்படி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவிற்கு மக்கள் கூட்டம் கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இவ்விழாவை பக்தர்கள் யாரும் நேரில் காண அயோத்திக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டும், தலைவர்களின் பாதுகாப்பு கருதியும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராம ஜென்ம பூமியில் நடைபெறக்கூடிய இவ்விழா இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.